ஏ.ஐ.டி.யு.சி. நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் ஏ.ஐ.டி.யு.சி. நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பாளர் ஏ.மாணிக்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அன்வர்அலி, அன்பு, பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் சிம்புதேவன் வரவேற்றார்.

மாநில துணைத்தலைவர் தேவதாஸ், மாநில குழு உறுப்பினர் சசிகுமார் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபாரிகளை சட்ட விரோதமாக அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்.

அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து விடுபடாமல் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.

வியாபாரச் சான்று வழங்க வேண்டும். சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டு வியாபார கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் சங்கர், சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story