ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி

கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

பரமக்குடியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பரமக்குடி சந்தை கடை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை பஸ் நிலையம் அருகே தடுத்து நிறுத்தி 30 பேரை கைது செய்தனர்.

போராட்டத்தின் போது தொழிற்சங்க உரிமைகளை மத்திய அரசு பறிக்கக் கூடாது. 60 வயது கடந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் பென்சன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

திருவாடானை

திருவாடானையில் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் லோகநாதன், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் உடையப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் குருசாமி, கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் வெங்கடேசன், தாலுகா மீனவர் சங்க செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் முருகன் கோவில் முன்பிருந்து தாலுகா அலுவலகம் நோக்கி சென்று அலுவலகத்தின் முன் மறியல் செய்ய முயன்றனர். நிகழ்ச்சிக்கு தேசிய குழு நிர்வாகி மீனாள் சேதுராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் ராஜன், மாநிலக்குழு நிர்வாகி தர்மராஜ், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் களஞ்சியம், ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட சங்க மாவட்ட பொருளாளர் முருகையா, பனை தென்னை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் மறியல் செய்ய முயன்ற 68 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story