பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் தலைவராக சசிகுமார், துணை தலைவர்களாக கணேஷ், லிங்கசாமி, துணை செயலாளர்களாக சக்திவேல், சிவசுப்பிரமணி, பொருளாளராக மகேந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், திருப்பூர் மாநகரின் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத விதிப்பு முறையை தடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையால் மோட்டார் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.