ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து வருகிற 24-ந்தேதி கரூரில் மறியல் போராட்டம் நடத்துவது, வீடுகள் இல்லாத கூலித்தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் வழங்க அரசு முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story