உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு


உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு
x
திருப்பூர்


உலக எஸ்ட்ஸ் தினம் டிசம்பர் மாதம் 1-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. மக்களிடம் எஸ்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உலக எஸ்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உலக எஸ்ட்ஸ் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

2 பேருக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடு ஒதுக்கீட்டு ஆணையையும், 2 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆணையையும், 3 பேருக்கு விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம் பெறும் ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் லட்சுமணன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ஜெகதீஷ்குமார், திட்ட மேலாளர்கள் ஹரிகரசுதன், சிவக்குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story