இடிந்துவிழும் நிலையில் கோவில் சுற்றுச்சுவர்


இடிந்துவிழும் நிலையில் கோவில் சுற்றுச்சுவர்
x

இடிந்துவிழும் நிலையில் கோவில் சுற்றுச்சுவர்

திருப்பூர்

அவினாசி

அவினாசி மங்கலம் ரோட்டில் வரலாற்று சிறப்புவாய்ந்த பழமையான ஆகாசராயர் கோவில் உள்ளது.. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் செலுத்த இக்கோவிலுக்கு வந்து கிடாய் வெட்டி பொங்கல் வைப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அவினாசியிலிருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் கோவில் மதில்சுவர் உள்ளது. இந்த ரோட்டில் தினசரி ஏராளமான இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் பொதுமக்கள் சென்று வருகின்றன்ர். ஆனால் சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்து பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் ரோட்டில் விழும் நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சுற்றுச்சுவா வெடிப்புகளில் மழைநீர் இறங்கி சுவர் மேலும் பலவீனம் அடைந்து வருகிறது. எனவே பழுதடைந்த நிலையில் உள்ள சுற்றுச்சுவரை கோவில் நிர்வாகத்தினர் விரைந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளன.

---


Next Story