விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவன் தற்கொலை முயற்சி
மயிலாடுதுறையில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்
விஷம் குடித்த சிறுவன்
இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார், சிறுவன் உள்பட 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்த சிறுவன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளான். உடனே அவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் தாக்கியதாக புகார்
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சிறுவனின் உறவினர்கள், விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசார் தாக்கியதால் தான் சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாக புகார் தெரிவித்தனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.