சமயபுரம் மாரியம்மனுக்கு அகிலாண்டேஸ்வரி கோவில் தளிகை
சமயபுரம் மாரியம்மனுக்கு அகிலாண்டேஸ்வரி கோவில் தளிகை வழங்கப்பட்டது.
திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தின் இரவு மாரியம்மனின் மற்றொரு சகோதரியாகக் கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு மற்றும் தோசை ஆகியவை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் கொண்டு செல்லப்படும். இந்த தளிகை வந்தபிறகு அந்த திரவியங்கள் கொண்டு அம்பாளுக்கு மகாஅபிஷேகமும் அதனைத்தொடர்ந்து, அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தயிர்சாதம், காய்கறிக்கூட்டு ஆகியவை அம்மனுக்கு நிவேதனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story