அலங்காநல்லூர் பகுதியில்பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
அலங்காநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிதக்கப்பட்டது
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் பகுதியில் பேரூராட்சி சார்பில் வணிக வளாகம், உணவு விடுதிகள், பலசரக்கு கடைகள், மற்றும் காய்கறி, இறைச்சி, உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை வியாபாரிகள் உபயோகிப்பதை தடுக்கும் பொருட்டு சோதனை நடைபெற்றது. சோதனைகளின்போது பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.3 ஆயிரத்து 100-வரை கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த பணியில் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், செயல் அலுவலர் ஜூலான்பானு, துணை தலைவர் சாமிநாதன், கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர்கள் ராஜா, அபிதா, துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரெங்கசாமி மற்றும் பணியாளர்கள் கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.