அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா: பாதுகாப்பு தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரம்


அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா: பாதுகாப்பு தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரம்
x

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு விழா

மதுரை மாவட்டம் பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறை அதிகாரிகளும், வருவாய், ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலை துறையினரும் இரண்டு ஜல்லிக்கட்டு மைதானங்களையும், பார்வையிட்டு ஏற்கனவே ஆய்வு செய்தனர், மேலும் நேற்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இரண்டு ஊர்களிலும், இருபுறமும் இரண்டடுக்கு தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

இதுதவிர அலங்காநல்லூரில் சுற்றுலா பயணிகள் அமரும் மேடை வர்ணம் பூசும்பணியும், தொடர்ந்து வாடிவாசல் பகுதியில் வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்றது.

முழு வீச்சுடன்

இதேபோல் பாலமேட்டிலும், பாதுகாப்பு தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி நடந்தது. மேலும், பார்வையாளகள் ர் அமரும் மாடம் மற்றும் வாடிவாசல் பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை இரண்டு பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள், நிர்வாகத்தினர், கவுன்சிலர்கள், பணியாளர்கள் நேரில் பார்வையிட்டனர். இந்த ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து பணிகளும் முழு வீச்சுடன் நடந்து வருகிறது.


Next Story