ஆலங்குளம் குவாரி நிரம்பியது
தொடர்மழையினால் ஆலங்குளம் குவாரி நிரம்பியது.
ஆலங்குளம்,
தொடர்மழையினால் ஆலங்குளம் குவாரி நிரம்பியது.
கல்குவாரி
ஆலங்குளம் அருகே அரசு சிமெண்டு ஆலைக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியிலிருந்து சிமெண்டு ஆலைக்கு தேவையான சுண்ணாம்புகல் எடுத்து விட்டனர். இப்போது செயல்படாத கல்குவாரியாக உள்ளது.
இதில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பயன்படுத்தபட்டு வருகின்றது. இதில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். ஆலங்குளம், அண்ணா நகர், பாரதிநகர் வசந்த் நகர், இருளப்ப நகர், பெரியார் நகர், நேதாஜி நகர், ஜெ.ஜெ.நகர், எம்.ஜி.ஆர்.நகர், இராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் இந்த குவாரியை பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்தநிலையில் தற்போது இந்த பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக இந்த குவாரி பெருகி உள்ளது.
இந்த குவாரியில் தண்ணீர் இருப்பதால் அருகில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களை எளிதில் விளைவிக்க முடியும். குவாரி பெருகியதால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.