ஊருணியில் பாசி அகற்றம்
ஊருணியில் பாசி அகற்றப்பட்டன.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம்-திருவனந்தபுரம் தெரு மையப்பகுதியில் அமைந்துள்ள பச்சை மடம் ஊருணியில் கோடைகாலத்திலும் தண்ணீர் உள்ளது. ஆனால் அதில் தேவையற்ற செடிகள் முளைத்து பாசிபடர்ந்து மாசுடன் காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் மூலம் தூய்மை பணியாளர்களால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று பாசிகள் அகற்றப்பட்டு விட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், விரைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்திய நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற தலைவர், நகா்மன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர், துப்புரவு பணியாளர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story