வரத்து கால்வாய்களை சீரமைத்து கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்


வரத்து கால்வாய்களை சீரமைத்து கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்
x

வரத்து கால்வாய்களை சீரமைத்து கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கைத்தறித்துறை ஆணையர் ராஜேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர்

கரூர்,

ஆய்வு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுப்பணித்துறையில் செயல்படுத்தி வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்தும், துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டமும் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.அப்போது தமிழ்நாடு கைத்தறித்துறை ஆணையர் தெரிவித்ததாவது:- கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.285.50 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 120.47 கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக உடனடியாக தூர்வாரும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

பணிகளை முடிக்க வேண்டும்

குறிப்பாக மழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீரானது வீணாகாமல் வழங்கு வாய்க்கால்கள் முறையாக தூர்வாரி, ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், சென்ற ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தவிர்க்கும் பொருட்டு பணியினை சீரிய முறையில் தூர்வாரி மழை நீரை வீணாக்காமல் கடைமடை வரை கொண்டு செல்வதற்கு பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு தூர்வாரப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்வதற்கு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு போகம் செய்யும் விவசாயி இரண்டு போகம் விவசாயம் செய்வதற்கு இப்பணியானது ஊன்று கோலாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

சான்றிதழ்கள்

முதல்-அமைச்சர் தனிப்பிரிவுகளிலிருந்து வரும் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்கள் மற்றும் நேரடியாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் எடுத்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, குளித்தலை வட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் நங்கம் காட்டுவாரியினை சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணியினை பார்வையிட்டார்.


Next Story