ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு சாமி திருவீதிஉலா வான வேடிக்கையுடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு சாமி திருவீதிஉலா வான வேடிக்கையுடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடிமங்கலம்,
ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு சாமி திருவீதிஉலா வான வேடிக்கையுடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆல்கொண்டமால்
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆல் கொண்டமால்கோவில் உள்ளது. கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோயில் விளங்கி வருகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் தமிழர் திருநாள் திருவிழாவின்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வந்து ஆல் கொண்ட மாலை வழிபட்டு செல்கின்றனர்.
மேலும் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தும், கால்நடை வளம் பெருக கறவைபாலை கொண்டு வந்து அபிஷேகம் செய்து திருநீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கின்றனர்.
திருவீதி உலா
ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு ஆல் கொண்டமாலுக்கு சிறப்பு அலங்காரமும், பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தமிழர் திருநாள்திருவிழாவில் இறுதி நிகழ்ச்சி யாக ஆல்கொண்டமால் திருவீதி உலா வான வேடிக்கையுடன் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
---
1½ காலம்
ஆல்கொண்டமால் கோவிலில் சாமி திருவீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.