அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்


அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று பகுதி மேயர் சங்கீதா இன்பம் உறுதி அளித்தார்.

விருதுநகர்

சிவகாசி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று பகுதி மேயர் சங்கீதா இன்பம் உறுதி அளித்தார்.

பகுதி சபை கூட்டம்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் நேற்று காலை பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 34-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற பகுதிசபை கூட்டத்தில் மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் சிவகாசியில் வளர்ச்சி பணிகள் நடக்காத நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் வளர்ச்சி பணிகள் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் நிறைவேற்றி தருவேன். அதற்கு தேவையான நிதிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார். எனவே பொதுமக்கள் என்னை சந்தித்து எப்போது வேண்டும் என்றாலும் குறைகளை தெரிவிக்கலாம். அதனை விரைவில் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

துணைமேயர்

இதேபோல் 35-வது வார்டில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார். 46-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல தலைவர் சேவுகன் மக்களிடம் குறைகளை கேட்டார். 40-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர் சபையர் ஞானசேகரன், 39-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர் ராஜேஷ், 28-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர் வெயில்ராஜ் ஆகியோர் மக்களிடம் குறைகளை கேட்டனர்.


Next Story