கூடலூரில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயாராக இருக்க வேண்டும்-ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் உத்தரவு


கூடலூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர், ஊட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பருவமழையை எதிர்கொள்வது மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்.டி. ஓ சரவண கண்ணன், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் துறை ரீதியாக அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பருவமழை காலத்தில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தயாராக இருக்க வேண்டும்

பின்னர் அமைச்சர் கா. ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் மழை அதிகம் பெய்கிறது. இதனால் முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு பருவ மழையை எதிர்கொள்வது, பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிராமங்கள் தோறும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

23 இடங்களில் பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 23 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதில் 1,200க்கும் மேற்பட்டவர்கள் தங்கலாம். இவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து துறையினரும் பருவமழை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழையில் இடிந்த வீடுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.4,100 வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடி


Next Story