கீழ்வேளூரில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்


கீழ்வேளூரில் அனைத்து விரைவு ரெயில்களும்   நின்று செல்ல வேண்டும்
x

கீழ்வேளூரில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்

நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் ‌ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

கீழ்வேளூர் பேரூராட்சியில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல தென்னக ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழ்வேளூர் பகுதிக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடை கட்டிடம் கட்ட பரிந்துரை செய்த நாகைமாலி எம்.எல்.ஏ. வுக்கு நன்றி தெரிவிப்பது.

ஒப்புதல்

கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மண் சாலைகளை பேவர் பிளாக் சாலைகளாக மாற்ற திட்ட நிதி கேட்பது. வடகிழக்கு பருவ மழை காலத்தை முன்னிட்டு நீர் இறைக்கும் எந்திரங்கள், கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து எந்திரங்கள், கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியை அழகுப்படுத்த புல் வெட்டும் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் சித்ரகலா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story