அனைத்து விரைவு ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்
நாங்குநேரியில் அனைத்து விரைவு ெரயில்களும் நின்று செல்ல வேண்டும் என அதிகாரியிடம், ரெட்டியார்பட்டி நாராயணன் வலியுறுத்தி உள்ளார்
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரியில், தெற்கு ெரயில்வே திருவனந்தபுரம் ெரயில்வே கோட்ட மேலாளரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுவை நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேரில் கொடுத்தார். அதில், நாங்குநேரி ெரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து அதிவேக விரைவு ெரயில்களும் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது, அ.தி.மு.க. நாங்குநேரி நகர செயலாளர் மு.சங்கரலிங்கம், நாங்குநேரி முன்னாள் நகர செயலாளர் பரமசிவன், 6-வது வார்டு செயலாளர் கண்ணன், கட்சி நிர்வாகிகள் ரெட்டியார்பட்டி லட்சுமணன், தருவை செல்லத்துரை, தகவல் தொழில் நுட்ப செயலாளர் நம்பிராஜன், இ.சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story