அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், சமூக நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ஆனந்தராஜ், தோட்டக்கலை துறை உதவி அலுவலர் கார்த்திக், கூட்டுறவுத்துறை சார்பாதிவாளர் முத்துராஜா, வறுமைகோடு திட்ட அலுவலர் சியாமளா மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 6 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கு சான்றிதழை ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் வழங்கினார். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அழகேசன் நன்றி கூறினார்.


Next Story