அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் அருகே இருக்கை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் அனைத்து கிராமங்களிலும் நீர்நிலைகளை பராமரித்தல், அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை உருவாக்குதல் போன்ற அடிப்படை வசதிகளுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தனிநபர் தேவைகள் பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்குதல், முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி, சுகாதார ஆய்வாளர் மணிமாறன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர், பஞ்சாயத்து தலைவர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story