அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெய்குப்பை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ராமலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக்கூடம் என 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதில் கால்நடை உதவி மருத்துவர் பெரோஸ் முகமது, தோட்டக்கலை உதவி அலுவலர் சரவண அய்யப்பன், வேளாண்மை உதவி அலுவலர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு, அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜீவா நன்றி கூறினார்.


Next Story