திருப்பத்தூரில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது


திருப்பத்தூரில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது
x

திருப்பத்தூரில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது

திருப்பத்தூர்

75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தின விழாவை அமுதப் பெரு விழாவாக கொண்டாட வேண்டும் என்றும், அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியகொடி பறக்க விடவேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோல் விடுத்திருந்தார்.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 3, லட்சம் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 208 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகள், 4 நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு தேசியகொடி வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றி பட்டொளி வீசி பறக்கிறது. பல்வேறு இடங்களில் தேசியகொடி ஏற்றும் போது வந்தே மாதரம் பாடல் ஒலிபரப்பப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story