அகில இந்திய கூடைப்பந்து போட்டி
அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
தனியார் நிறுவனங்கள் மற்றும் கரூர் கூடைப்பந்து கிளப் இணைந்து நடத்தும் அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் ஆண்கள் போட்டியில் லோனாவிலா இந்தியன் நேவி, திருவனந்தபுரம் கே.எஸ்.இ.பி., பஞ்சாப் போலீஸ், டெல்லி இந்தியன் ரெயில்வே, பெங்களூரு பரோடா வங்கி, டெல்லி இந்தியன் ஏர்போர்ஸ், சென்னை டி.என்.பி.ஏ., சென்னை இந்தியன் வங்கி ஆகிய 8 அணிகளும், பெண்கள் போட்டியில் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே, கொல்கத்தா கிழக்கு ரெயில்வே, சென்னை டி.என்.பி.ஏ. அணி, டெல்லி வடக்கு ரெயில்வே, கேரளா போலீஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் நேற்று காலை பெண்கள் பிரிவில் டி.என்.பி.ஏ. அணியும், டெல்லி வடக்கு ரெயில்வே அணியும் மோதின. இப்போட்டியில் டெல்லி வடக்கு ரெயில்வே அணி வெற்றி பெற்றது.
பின்னர் மாலை நடைபெற்ற ஆண்கள் போட்டியில் லோனாவிலா இந்தியன் நேவி அணியும், டெல்லி இந்தியன் ரெயில்வே அணியும் மோதின. இதில் லோனாவிலா இந்தியன் நேவி அணி வெற்றி பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை கரூர் கூடைப்பந்து கிளப் தலைவர் வி.என்.சி. பாஸ்கர், செயலாளர் முகமது கமாலுதீன் உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.