அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா
அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பரதநாட்டிய திருவிழா
தேசிய பரதநாட்டிய அகாடமி சார்பில் 53-வது அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழா காலை 9 மணிக்கு தொடங்கிய இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இந்த போட்டிகளை திட்ட அதிகாரி ரவீந்திரகுமார், மைத்ரிராஜகோபாலன், தேசிய பரதநாட்டிய அகாடமி தலைவர் அனிதா ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் 4 வயது முதல் 60 வயது வரை உள்ள பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.
100 கலைஞர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் தனி நபர் நடனம் மற்றும் குழு நடனம் ஆகியவை நடைபெற்றது. குழு நடனங்களில் அதிக பட்சமாக 4 பேர் முதல் 6 பேர் வரை பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பிரகதீஸ்வரா தேசிய விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை நாட்டிய கலைஞர் சுவாதிபரத்வாஜ் செய்திருந்தார்.