அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யக்கோரி தூத்துக்குடியில் பெண்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் கடந்த ஆண்டில் அதிகரித்து காணப்பட்டது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு அது காலாவதியாகி விட்டது. இதனால் தற்போது ஆன்லைன் சூதாட்டங்களும், அதற்கான விளம்பரங்களும் அதிகரித்து விட்டன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலர் பூமயில், மாநில குழு உறுப்பினர் இனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story