அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்

ஊத்துக்குளி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஊத்துக்குளி தாலுகா கமிட்டியின் சார்பில் ஊத்துக்குளி நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தாலுகா துணை தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி திருப்பூர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி சிறப்புரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், தாலுகா செயலாளர் கொளந்தசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொருளாளர் மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டத்தையொட்டி தாசில்தார் சைலஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊத்துக்குளி தாலுகாவில் புறம்போக்கு இடங்கள் பட்டா வழங்க தகுதியுள்ள நிலமா? என ஆய்வு விரைவில் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்குவந்தது.



Next Story