அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்


அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி ஆனி முத்துராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் அய்யாத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஈரோட்டில் நடைபெற இருக்கும் கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் 10 வாகனங்களில் சென்று பங்கேற்பது, கோவில்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் தினசரி மார்க்கெட்டை இடிக்காமல் மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும், அதிக கடைகளுடன் புதிய மார்க்கெட் கட்டித் தர வேண்டும்.

கூடுதல் பஸ் நிலையத்தில் விபத்துகளை தவிர்க்க அனைத்து பஸ்களும் வந்து சென்று மக்கள் பாதுகாப்பான முறையில் இறக்கி விட்டு செல்ல வேண்டும்.

கோவில்பட்டி நகருக்குள் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். கோவில்பட்டி சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்து நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story