அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட மாநாடு


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட மாநாடு
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட மாநாடு நடந்தது.

திண்டுக்கல்

அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. கதிரவன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முத்துராமலிங்கம் பங்கேற்று பேசினார். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக பசும்பொன்ராஜா, துணை தலைவர்களாக பால்பாண்டி, மலர்செல்வம், மாவட்ட செயலாளராக பி.எஸ்.ஜெயராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட பொருளாளராக சீனிவாசன், துணை செயலாளர்களாக விஜயகுமார், கார்த்திக், சுவனேஸ் பைரவன் உள்பட நிர்வாகிகள் பலர் தேர்வுசெய்யப்பட்டனர். மாநாட்டில், வருகின்ற பிப்ரவரி 12-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும். திண்டுக்கல்லில் முத்துராமலிங்கதேவர் சிலையும், கலெக்டர் அலுவலகத்தில் நேதாஜி சிலையும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் மரபை மீறிய தமிழக கவர்னருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. வருகிற 23-ந்தேதி அனைத்து பகுதிகளிலும் நேதாஜி உருவப்படத்தை வைத்து, சுபாசிசமே இந்தியாவின் எதிர்காலம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் இளைஞரணி செயலாளர் சேனாதிபதி மணி, முதன்மை செயலாளர் ராயன்குமார், இணைச்செயலாளர் கார்கில் கண்ணன், மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story