அகில பாரத இந்து மகா சபா பொதுக்கூட்டம்


அகில பாரத இந்து மகா சபா பொதுக்கூட்டம்
x

நெல்லை டவுனில் அகில பாரத இந்து மகா சபா பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

அகில பாரத இந்து மகா சபா கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் நேற்று நடைபெற்றது. நெல்லை மண்டல தலைவர் இசக்கிராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைச்செல்வன், செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன் வரவேற்றார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். இதில் தொழிற்சங்க துணைத்தலைவர் சிவாஜி சேட், துணை பொது ச்செயலாளர் மூர்த்தி, மாநகர தலைவர் செல்வம், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநகர தலைவர் ஜோதிசங்கர், வடக்கு மாவட்ட துணைத்தலைவர் மயிலேறும் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story