அகில இந்திய ஆக்கி போட்டி:பெங்களூரு அணி வெற்றி
கோவில்பட்டியில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை கான 12 -வது அகில இந்திய ஆக்கி போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று மாலையில் பெங்களூரு கனரா வங்கி அணியும் செகந்திராபாத் தென் மத்திய ரெயில்வே அணியும் மோதின. இதில் பெங்களூரு கனரா வங்கி அணி
3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மாலை 6.15.மணிக்கு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின.
இரவு 8.15 மணிக்கு 6-வது லீக் ஆட்டத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணி மோதின. இன்று (சனிக்கிழமை) காலை
7 மணிக்கு புனே கஸ்டம்ஸ் அணியும்-
சென்னை இந்தியன் வங்கி அணியும்
மோதுகின்றன. மாலை 5.15 மணிக்கு மும்பை யூனியன் வங்கியுடன், கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணியும் மோதுகின்றன.
மாலை 6.45 மணிக்கு பெங்களூரு ெரயில் வீல் பேக்டரி அணியும், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி அணியும், இரவு 8.15 மணிக்கு புதுடெல்லி
பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும்,
பாம்போஸ் நிஸ்வாஸ் ஆக்கி அணியும்
மோதுகின்றன.