திசையன்விளையில் அகில இந்திய கபடி போட்டி


திசையன்விளையில் அகில இந்திய கபடி போட்டி
x

திசையன்விளையில் அகில இந்திய கபடி போட்டி நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் விழாவையொட்டி, திசையன்விளை வி.எஸ்.ஆர். மைதானத்தில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 4 நாட்கள் நடக்கிறது. தொடக்க விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்து வருகிறார்.

கபடி போட்டிகளை ரசிகர்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பார்வையிட்டார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story