திருச்சியில் அகில இந்திய கராத்தே போட்டி தொடங்கியது


திருச்சியில் அகில இந்திய கராத்தே போட்டி தொடங்கியது
x

திருச்சியில் அகில இந்திய கராத்தே போட்டி தொடங்கியது

திருச்சி

19-வது அகில இந்திய ஓபன் கராத்தே போட்டி திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டா, குமித்தே, ஓபன் குமித்தே பிரிவில் நேற்று போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில துணைத்தலைவர் இளஞ்செழியன், ஜெயகர்ணா ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். இதில் உலக கராத்தே நடுவர் காளீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கட்டா, குமித்தே, குரூப் கட்டா பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இன்றைய போட்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.


Next Story