அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க கூட்டம்
அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரையண்ட் நகரில் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக் மாவட்ட செயலாளர் பிரசன்னகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் பொன்ராஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடுவது, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டவேண்டும். தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதியில் தமிழக அரசு சார்பில் வெண்கலத்தால் ஆன காமராஜர் சிலை நிறுவ வேண்டும், ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வர்த்தக அணி ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் பாபு, 45-வது வார்டு செயலாளர் அந்தோணிராஜ், தலைவர் ஜோசப், 22 வது வார்டு செயலாளர் மணி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.