அகில இந்திய ஓய்வூதியர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய ஓய்வூதியர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே திருச்சி அகில இந்திய ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் கனகராஜன் தலைமை தாங்கினார். மருதமுத்து, சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பழனியப்பன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக கோஸ்யாரி கமிட்டி பரிந்துரைப்படி ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். ஆலை மூடல், விருப்ப ஓய்வூதியம் பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அனைவருக்கும் 2 ஆண்டு வெயிட்டேஜ் வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட ரூ.1000 ஓய்வூதியத்தை அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.