அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க கூட்டம்


அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க கூட்டம்
x

அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூரில் நேற்று அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஜூன் 30-ல் பணி ஓய்வு பெற்றோருக்கு நேஷனல் இன்கிரிமெண்ட் வழங்கி பென்ஷன் மறு நிர்ணயம் செய்ய வேண்டும். 1.1.2006-ம் ஆண்டு முன் பணி ஓய்வு பெற்றோருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில உதவி செயலாளர் செல்வன், மாநில பொதுச் செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story