அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி:நெய்வேலி வீரர் தங்க பதக்கம் வென்று சாதனை
அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் நெய்வேலி வீரர் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கடலூர்
32-வது அகில இந்திய ஜீ.வி. மவுலங்கர் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி மேற்கு வங்காளத்தில் நடந்தது. இதில் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் தமிழகத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வேகாகக்கொல்லையை சேர்ந்த சிரஞ்சிவீ (வயது 37) என்பவர் கலந்து கொண்டு, 377 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். இவர் நெய்வேலி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story