தூத்துக்குடியில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன செயற்குழு கூட்டம்


தூத்துக்குடியில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன செயற்குழு கூட்டம்
x

தூத்துக்குடியில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன செயற்குழு கூட்டம் வருகிற 9-ந் தேதி முதல் 2 நாட்கள் நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது. கூட்டத்தை அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுபாஸ் லம்பா தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசுகிறார். சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் கருமலையான் தொடக்க உரையாற்றுகிறார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன கொடியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு ஏற்றி வைக்கிறார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஏற்றி வைக்கிறார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், நிறைவுரையாற்றுகிறார். அதே போன்று இலவச பயிற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டகிறார். மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர் நன்றி கூறுகிறார்.

கூட்டத்தில் புதிய பென்சன் திட்டம், தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள், அக்னிபாத் திட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வரகிறது. இது குறித்து விவாதித்து எதிர்கால இயக்க நடவடிக்கைகள் முடிவு செய்யப்பட உள்ளது. கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்ட ஏற்பாடுகைள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story