அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம்
திருமருகலில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் மன்ற ஒன்றிய பொருளாளர் விமல்ராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் மாரிகார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் திருமருகலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வர வேண்டும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story