அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில், மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய பஞ்சாயத்து உதவி இயக்குனர் உமாசங்கர் மீது நடவடிக்கை கோரியும,் கன்னிசேரி பஞ்சாயத்து முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. கலெக்டர் மேகநாதரெட்டி பஞ்சாயத்து உதவி இயக்குனர் உமாசங்கர் விருதுநகரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கன்னிசேரி பஞ்சாயத்து கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story