கூடலூரில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கெட்டுப்போன இறைச்சி விற்பனையை தடுக்க கோரி கூடலூரில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நீலகிரி
கூடலூர்,
கூடலூரில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வாசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கெட்டுப்போன இறைச்சி விற்பனையை தடுக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அம்சா (காங்கிரஸ்), சகாதேவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), அனிபா (முஸ்லிம் லீக்), முகமது கனி (இந்திய கம்யூனிஸ்ட்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story