அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை


அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை
x

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு சிவகாசி, திருத்தங்கலில் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்

சிவகாசி,

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு சிவகாசி, திருத்தங்கலில் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிவகாசி, திருத்தங்கலில் உள்ள அவரது சிலைக்கு மாநகர தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநகர செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா இன்பம், திருத்தங்கல் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் பொன்சக்திவேல், மாநகர பகுதி செயலாளர்கள் அ.செல்வம், காளிராஜன், மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் திருப்பதி, ஜெயராணி, சுதாகரன், பாக்கியலட்சுமி மாணிக்கம், மாவட்ட பிரதிதிநி ராஜேஷ், மைக்கேல், மாரீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல் சிவகாசி, திருத்தங்கலில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், டாக்டர் விஜயஆனந்த், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சாம், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், லயன் லட்சுமிநாராயணன், இளநீர்செல்வம், ரமணப்ரியன், இளைஞரணி கார்த்திக், மகளிர் அணி முருகேஸ்வரி, ராதா, யோவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். ஓ.பி.எஸ். பிரிவு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் தலைமையில் அக்கட்சியினர் சிவகாசியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம், ராஜாராம்பாண்டியன், காளி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சந்தோஷ், முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம் உள்பட பலர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.


Next Story