அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை


அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை
x

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்

சிவகாசி,

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்தநாள்

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க.வினர் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்ப்ரியா காளிராஜன், பகுதி செயலாளர் காளிராஜன், ஆ.செல்வம், மண்டல தலைவர்கள் அழகுமயில் பொன்சக்திவேல், சேவுகன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன், நகர ஊரமைப்பு துறை உறுப்பினர் கே.வி.கந்தசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநத்தம் ஆரோக்கியராஜ், வெங்கடேஷ், பகுதி செயலாளர்கள் திருத்தங்கல் சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, தொகுதி கருப்பசாமி பாண்டியன், சாம்ராஜா, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் அசன் பதுருதீன், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.

ம.தி.மு.க. சார்பில் நகர செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான ராஜேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பாண்டியன், கம்மாபட்டி ரவிச்சந்திரன், பகவதி, ஒன்றிய பொருளாளர் உதயசங்கர், நகர துணை செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாதவன், சங்கர்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் கணேசன் செய்திருந்தார்.


Next Story