கோவில்பட்டியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி 2-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் நேற்று மாலையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், நகரச் செயலாளர் பால்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜோதி பாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர் முனியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2-ந் தேதி கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு மாலை 5 மணிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் ரஜினி கண்ணம்மா நன்றி கூறினார்.