பல்பொருள் அங்காடியில் அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும்


பல்பொருள் அங்காடியில் அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் பல்பொருள் அங்காடியில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் கூறினார்.

திருப்பத்தூர்

வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் கலந்துகொண்டார். அவர் பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடி மற்றும் சைபர் கிரைம் போலீஸ் நிலைய பணிகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் பிடித்த காவலர்களையும், திருப்பத்தூர் காவல்துறை பல்பொருள் அங்காடியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அனைத்து பொருட்களும்

பின்னர் பல்பொருள் அங்காடியை பார்வையிட்டு திருப்பத்தூர் மாவட்ட காவலர்களுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் தேவையான பொருட்கள் கிடைக்குமாறு கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள கம்பிகள் சுற்றப்பட்ட பேரிகார்டுகளை பார்வையிட்டு, கம்பிகளை அகற்றி விட்டு அவற்றை சாலை பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

திருப்பத்துார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அதில் சைபர் கிரைம், பொருளாதார குற்றப்பிரிவு, ஆலோசனை கூட்ட அரங்கம், வீடியோ கான்பரன்ஸ் அறை, போலீஸ் ஓய்வறை, ஆவணங்கள் பாதுகாப்பு அறை, குற்ற புலனாய்வு மற்றும் உளவுப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் இடம்பெற்றுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுமான பணிகளை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தரம், அங்கு செய்யப்பட்டு வரும் வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உடன் இருந்தனர்.All products should be available in the supermarket


Next Story