"மக்கள் களம் நிகழ்ச்சியில் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்"- கனிமொழி எம்.பி. உறுதி


மக்கள் களம் நிகழ்ச்சியில் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்- கனிமொழி எம்.பி. உறுதி
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே நடந்த மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிைறவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே நடந்த மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

மக்கள் களம் நிகழ்ச்சி

எட்டயபுரம் அருகே சோழபுரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், போடுபட்டி மற்றும் டி.சண்முகபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அடிப்படை பிரச்சினை மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் விபத்து நிவாரண தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை என மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.46 லட்சத்து 34 ஆயிரம் சுயதொழில் கடனுதவிகளையும் அவர் வழங்கினார்.

விரைவாக நடவடிக்கை

பின்னர் அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களாக வாங்கி விரைவில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் களம் நிகழ்ச்சி. கடைக்கோடி கிராமங்களில் வசித்து வரக்கூடிய நீங்கள் உங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டுமென்று சொன்னால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த மக்கள் களம் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் நாங்களே உங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து உங்களிடம் மனுக்களை பெற்று அதனை உடனடியாக பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்வது தான் இந்த மக்கள் களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை அரசுத்துறைகள் வாயிலாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தார் சாலை வசதி, சிமெண்டு சாலை வசதி, வாறுகால் வசதி, நீர்தேக்கத்தொட்டி, உயர்மட்ட பாலம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தடுப்புச்சுவர், சமுதாயக்கூடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றி தருவேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எட்டயபுரம் தாசில்தார் மல்லிகா, கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகரன், டி.சண்முகபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்வ விநாயகமூர்த்தி, புங்கவர்நந்தம் பஞ்சாயத்து தலைவர் லெட்சுமி பிச்சை, துணைத் தலைவர் வைர ஜெயந்தி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story