அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்


அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
x

அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.

திருச்சி

மலைக்கோட்டை:

தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் திருப்பதி வரவேற்று, கூட்டத்திற்கான பொருள் குறித்து விளக்கி பேசினார். இதில் எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்க கோட்ட செயலாளர் வீரசேகரன், மாநில அமைப்பு செயலாளர் பழனி ஈஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். மாநில நிர்வாகி சண்முகராஜா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஸ்ரீதர், செந்தில்குமார், பாலகிருஷ்ணன், யோகேஸ்வரன் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் நல வாரியங்கள் சிறப்பாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நல வாரியங்களில் பதிவின்போது கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஒப்புதல் பதிவு பெறுவதை ரத்து செய்து, உழவர் பாதுகாப்பு திட்ட தனிநபர் அடையாள அட்டையாக தொழிலாளர் நல வாரியத்தில் இணைத்து, அதன் மூலம் ஆய்வு செய்து அடையாள அட்டையை அனைத்து தினக்கூலி பணியாளர்களுக்கும் உரிய முறையில் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை, பணி இழப்பு கூலி உள்ளிட்டவை வாரியங்கள் மூலம் கிடைக்க வேண்டும். பெண்களுக்கான உதவித்தொகை குறைந்தபட்சம் மாதம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி அறிவித்து அனைத்து வாரியங்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story