கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல தே.மு.தி.க. கோரிக்கை


கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல தே.மு.தி.க. கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என ரெயில் நிலைய அதிகாரியிடம் தே.மு.தி.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மகளிர் அணி மாநில துணை செயலாளர் வக்கீல் சுபப்பிரியா, மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பெருமாள் சாமி மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி ெரயில் நிலைய அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "தொழிற்சாலைகள் நிறைந்த கோவில்பட்டி நகரில் மக்கள் ஏராளமானோர் ெரயிலில் செல்வதால், தென் மாவட்டங்களில் கோவில்பட்டி ெரயில் நிலைய வருமானம் தினசரி பல லட்சம் ஈட்டி தருவதாகும். எனவே கோவில்பட்டி நகர மக்களின் நலன் கருதி கோவில்பட்டி ெரயில் நிலையத்தில் கன்னியாகுமரி- ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை- கன்னியாகுமரி, நிஜாமுதீன்- கன்னியாகுமரி, ஓகா- தூத்துக்குடி, மதுரை- புனலூர் செல்லும் ெரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.


Next Story