அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

ஆரணி அரசு பணிமனை முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலையில் அரசு பணிமனை முன்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணைத்தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார்.

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டன் சச்சின் சிவா விரைவு பஸ்சில் ஏற்ற மறுத்த கண்டக்டரை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story