அனைத்து வாகனங்களும் அனைத்து வாகனங்களும் நாளை முதல் இயக்கப்படும்


அனைத்து வாகனங்களும் அனைத்து வாகனங்களும் நாளை முதல் இயக்கப்படும்
x

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் அனைத்து வாகனங்களும் அனைத்து வாகனங்களும் நாளை முதல் இயக்கப்படும்

வேலூர்

காட்பாடி

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் ஓடுதளத்தில் இணைப்புகள் வலுவிழந்து இருந்தது. அதனை சீர் செய்யும் வகையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அனைத்து வாகன போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டது.

ரெயில்வே துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் பாலம் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறைகளுடன் பல்வேறு ஆய்வு கூட்டம் நடத்தியும், நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டது.

தற்போது பணிகள் முடிந்து பாலத்தில் வாகன போக்குவரத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பாலத்தின் ஸ்திரத்தன்மை பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

எனவே நாளை (திங்கட்கிழமை) காலை 6.30 மணி முதல் கனரக சரக்கு வாகனங்களைத் தவிர அனைத்து வாகனங்களும் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படும்.

சரக்கு கனரக வாகனங்கள் இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story