பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு தொடர்பாகஅனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் மகாசபை கூட்டம்
பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு தொடர்பாகஅனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் மகாசபை கூட்டம்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாத்திர பட்டறை தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன்படி எவர்சில்வர், பித்தளை, செம்பு பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை கடந்த மாதம் நிறைவடைந்து ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கூலி உயர்வு விபரங்களை பட்டியலாக வெளியிடும் சிறப்பு மகாசபை கூட்டம் நேற்று அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள காமாட்சியம்மன் பாத்திர தொழிலாளர் சங்க கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு எல்.பி.எப். வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் ரத்தினசாமி (எல்.பி.எப்.), ரங்கராஜ், குப்புசாமி (சி.ஐ.டி.யு.), தேவராஜ் (ஏ.டி.பி.), செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), அசோக்குமார் (ஐ.என்.டி.யு.சி.), அப்புக்குட்டி, பாண்டியன் (ஹெச்.எம்.எஸ்.), சீனிவாசன், லட்சுமி நாராயணன் (பி.எம்.எஸ்.), முத்துகிருஷ்ணன், அர்ஜøனன் (காமாட்சியம்மன் சங்கம்) உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கூலி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் முறை குறித்து தொழிலாளர்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது.
----
Reporter : M. Balasubramanian Location : Tirupur - Annuparpalayam